பொது செய்தி

தமிழ்நாடு

சமமான ஊதியம் வேண்டும் பணியாளர்கள் கோரிக்கை

Added : டிச 05, 2019
Advertisement

கூடலுார்:'தமிழ்நாடு பல்நோக்கு அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு மாநிலம் முழுவதும் சமமான ஊதியம் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்நோக்கு அரசு மருத்துவமனை பணியாளர்கள் சங்க, கூடலுார் வட்ட கூட்டம் நடந்தது. மோகன்ராஜ் வரவேற்றார். தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.கூட்டத்தில், 'பல்நோக்கு மருத்துமனையில் காலை, 7:00 முதல் இரவு 7:00 மணி வரை பணியாற்றி வருகிறோம். பணி நேரத்தை குறைக்க வேண்டும்.

மாவட்டத்துக்கு மாவட்டம் ஊதியம் வேறுபாடு உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க வேண்டும். ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர். முத்துகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X