பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை

Added : டிச 05, 2019
Advertisement
 ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை

சிதம்பரம் : பாபர் மசூதி இடித்த நாளை முன்னிட்டு, கடலுார், சிதம்பரம் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு, சிதம்பரம் ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சிதம்பரம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில், போலீசார் கார்த்திகேயன், பிரபாகரன், சாந்தி, கோமதி, தனிப்பிரிவு பாஸ்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிதம்பரம் வழியாக வந்த திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களையும், பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர்.சந்தேக நபர்கள் தீவிர விசாரணைக்கு பின்னர் பயணத்திற்கு அனுமதிக்கின்றனர். ரயில் பாதையிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கடலுார் கடலுார், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவ்வழியாக வந்த ரயியில்கள் மற்றும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். ரயில் பாதைகளையும் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை மேற்கொண் டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X