தேசிய ஸ்னுாக்கர் போட்டி குன்னுார் மாணவி தேர்வு

Added : டிச 05, 2019
Advertisement
 தேசிய ஸ்னுாக்கர் போட்டி  குன்னுார் மாணவி தேர்வு

குன்னுார்:தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டியில், பங்கேற்க குன்னுார் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவி மரியம் ஆக்னஸ், 18.இவர், சென்னையில் தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னூக்கர் சங்கம் சார்பில் நடந்த, மாநில பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டியில் பங்கேற்றார். 19 பேர் விளையாடியதில், சீனியர் ஸ்னுாக்கர் போட்டி; ஜூனியர் போட்டி ஆகியவற்றில், 2ம் இடமும், சீனியர் பில்லியர்ட்சில், 3ம் இடமும் பெற்றார்.

இதை தொடர்ந்து, ஜனவரியில் நடக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மரியம் ஆக்னஸ் தேர்வு செய்யப்பட்டார்.தற்போது, குன்னுார் கிளப்பில், இவரது தந்தை, குமார் பயிற்சியாளராக இருந்து பயிற்சி அளித்து வருகிறார்.

ஏற்கனவே, 2013ம் ஆண்டில் இருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்ற இவர், கடந்த பிப்., மாதம் நடந்த மாநில பில்லியர்ட்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X