பஞ்சரான சாலையில் பயணிகள் அவதி

Added : டிச 05, 2019
Advertisement
 பஞ்சரான சாலையில் பயணிகள் அவதி

பந்தலுார்:பந்தலுார் பஜாரில் இருந்து மைதானம் வழியாக செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளதால், மக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பந்தலுார் பஜாரில் இருந்து விளையாட்டு மைதானம் வழியாக, ஹட்டி, காலனி மற்றும் அரசு மாணவர் மற்றும் மாணவியர் வீடுகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. நெல்லியாளம் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இந்த சாலை,சீரமைத்து பல ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.இந்த வழியாக தினசரி அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் நிலையில், மோசமான நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

மேலும், இந்த சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் நடந்து செல்லும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு, பல தடுமாறி விழுந்து பாதிப்பு ஏற்படும் சூழல் தொடர்கிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தெருவிளக்கு அமைக்கவும் சாலையோரம் முட்புதர்களை அகற்றவும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X