இந்தியா

வாகனங்களுக்கு பேன்சி எண் ஏலம் 9ம் தேதி முதல் பதிவு செய்யலாம்

Added : டிச 05, 2019
Advertisement

புதுச்சேரி : போக்குவரத்து துறையில் திருபுவனை வரிசையில்பேன்ஸி வாகன எண்கள் ஏலம் விடுவதற்கான பதிவினை வரவேற்றுள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போக்குவரத்து துறையில் பி.ஒய்.05 வி.ஏ., (திருபுவனை) வரிசையில் உள்ள பேன்ஸி எண்கள் https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 9ம் தேதி காலை 10:00 மணி முதல் 31ம் தேதி மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது.இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர், பாஸ்வேர்டு https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் 9 ம் தேதி முதல் 24 ம்தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்தவர்கள் மட்டுமே வரும் 9ம் தேதி காலை 11:00 மணி முதல் 31ம் தேதி மாலை 4.30 மணி வரை நடக்கும்ஏலத்தில் பங்கேற்கலாம்.

இந்த மின்னணு முறையிலான ஏலத்தில் பங்கு பெற விரும்புபவர்கள் அதற்கான வழிமுறைகள், ஏல நிபந்தனைகளை வரும் 9ம் தேதி முதல் https://transport.py.gov.in என்ற இணைய தள முகவரியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.விண்ணப்ப தொகையில் விவரம், இ.எம்.டி., பின் விபரம், ஏலம் நிபந்தனைகள் குறித்து விவரங்களை போக்குவரத்து துறை அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்-லைன் பேமெண்ட் மூலம் இணைய தளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். நேரிலோ அல்லது காசோலையாகவோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X