வில்லியனுார் : வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில் நடந்த தேசிய மருந்தாளுனர் வார விழாவில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
அரியூர் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில் 58வது தேசிய மருந்தாளுனர் வார விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பார்மசி கல்லுாரி முதல்வர் சரோஜினி வரவேற்றார்.வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மின் மற்றும் மின்னணுத்துறை பேராசிரியர் தியாகராஜன் மற்றும் மருத்துவக் கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவை முன்னிட்டு கல்லுாரி வளாகத்தில் பொதுமக்களுக்கும், கல்லுாரி பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.