பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிலத்தில் கட்டடம்; வாடகை வருமானம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

Added : டிச 05, 2019
Advertisement
 அரசு நிலத்தில் கட்டடம்; வாடகை வருமானம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

பந்தலுார்:'பந்தலுார் பஜாரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி லாபம் பார்க்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அரசு நிலத்தை மீட்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும் அரசு புறம்போக்கு நிலங்கள், கிராம முயற்சி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. 100 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் இருப்பதாகவும் அவை அனைத்தும், தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் ஏற்கனவே, வருவாய் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து, மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றும் கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில், பந்தலுார் பஜார் மையப் பகுதியில், 'சர்வே' எண்-2298 ல், 1.27 ஏக்கர் நிலம் கிராம மேய்ச்சல் நிலமாக உள்ளது.

வருவாய் துறை ஆவணங்களில் மட்டுமே நிலம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த நிலத்தை தனிநபர்கள் பலரும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி அனுபவித்து வருகின்றனர். இதில், சிலர் 'ஷெட்' மற்றும் நிரந்தர கட்டடங்கள் அமைத்து வாடகைக்கு விட்டு லாபம் பார்த்து வருகின்றனர்.ஆனால், 'இந்த பகுதியில் அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு நிலம் இல்லை,' என்று கூறி,பல கோடி ரூபாய் நிதி அரசு கஜானாவுக்கு திரும்ப சென்றது.

பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.குறிப்பாக, 'சிவில் சப்ளை குடோன், உள் விளையாட்டு அரங்கம், காய்கறி மார்க்கெட், அரசு ஊழியர்கள் குடியிருப்பு' கட்டடங்கள் கட்டுவதற்கு இடம் இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.ஆனால், இந்த நிலத்தை ஏற்கனவே நில ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சி செய்த வருவாய்த்துறை அதிகாரிகளை, அரசியல் கட்சியின் தலைவர்கள் இடமாற்றம் செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

தற்போது இதே பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கூறுகையில்,''இது குறித்து ஆய்வு மேற்கொண்டு,பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X