விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கல்| Dinamalar

இந்தியா

விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கல்

Added : டிச 05, 2019

காட்டேரிக்குப்பம் : புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில் விவசாயிகளுக்கான மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சந்தைப்புதுக்குப்பத்தில் நடந்தது.

வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். வேளாண் அலுவலர் நடராஜன், பயிர் வளர்ச்சிக்கு தேவையான பேரூட்டச்சத்து மற்றும் நுண்ணுாட்டச்சத்து, இயற்கை விவசாயத்தின் மண் வளம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.துணை இயக்குனர் வேணுகோபால ராவ், மண்வள அட்டையின் மூலம் வருமானம் இரட்டிப்பாவது குறித்தும், இணை இயக்குனர் ராகவன்,மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். கூடுதல் இயக்குனர் ரவிப்பிரகாசம், விவசாயிகளுக்கு மண்வள அட்டையைவழங்கினார்.

காமராசர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ரவி, மண்வள அட்டை மூலம்நீடித்த வேளாண்மை குறித்து விளக்கினார். இதில், சுத்துக்கேணி, சந்தைப்புதுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்வள அட்டை பெற்றுக் கொண்டு பயனடைதனர்.ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர்கள் குமரன், நாராயணசாமி, குணசேகரன், செயல்முறை விளக்க உதவியாளர்கள் சதீஷ்குமார், பழனியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X