இந்தியா

ஜவகர் நவோதயா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : டிச 05, 2019
Advertisement

புதுச்சேரி : பெரியகாலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது.

நிகழ்ச்சியில் 19வது பேட்ச் மாணவ, மாணவிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே கிரிக்கெட் வலை பயிற்சிக் கூடங்கள், கலைக்கூட காட்சிப் பலகை, பள்ளியின் மருத்துவ அறைக்கு தேவையான 'நீர் வழங்கி' உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் விடுதிக்கு தேவையான மின்விசிறிகள் உள்ளிட்ட 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை வழங்கினர்.

கிரிக்கெட் வலை பயிற்சிக் கூடங்களை பள்ளி முதல்வர் பொன்.ராமச்சந்திரன், கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப் பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் சசிக்குமார், சேந்தநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் செல்வி, பணி நிறைவு பெற்ற உடல்கல்வி ஆசிரியர் பழனிசாமி, மத்திய அரசின் விளையாட்டு பயிற்சியாளர் அறிவழகன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பள்ளி மாணவ-மாணவிகளிடம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கம், பயன்பாடு பற்றி சிறப்புரையாற்றினர்.

முன்னதாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 7 வது பேட்ச் முன்னாள் மாணவ, மாணவிகளை, இந்த ஆண்டு நிகழ்ச்சியை நடத்தும் 19வது பேட்ச் மாணவ-மாணவிகள் சால்வை அணிவித்து கவுரவித்தனர். முன்னதாக முன்னாள் மாணவர் சுரேந்தர் வரவேற்றார். கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவி சசிரேகா நன்றி கூறினார்.

பிற்பகலில் பள்ளி முதல்வர் பொன்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த வருடத்திற்கான 20வது பேட்ச் மாணவ-மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடல் வந்திருந்த முன்னாள் மாணவர்களிடம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ராம்குமார் தலைமையில் சுரேஷ், கார்த்திகேயன், சரண்ராஜ் வெங்கடேசன், அமுதவள்ளி, சசிரேகா, செவ்வந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X