இந்தியா

அரிக்கமேட்டில் மீண்டும் அகழாய்வு; ராஜ்யசபாவில் கோகுலகிருஷ்ணன் கோரிக்கை

Added : டிச 05, 2019
Advertisement

புதுச்சேரி : 'அரிக்கமேட்டில் அருங்காட்சியகம் அமைத்து, அகழ்வாராய்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும்' என, கோகுலகிருஷ்ணன் எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.

பார்லிமெண்டின் ராஜ்யசபாவில் ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது:புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு, சங்க காலத்திற்கு முற்பட்ட துறைமுக நகரமாக, கிரேக்க, அரேபிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொண்ட பழம்பெரும் தளமாகும். சுமார் 14 எக்டேரில் பரந்துள்ள இந்த இடம் தற்போது பாதுகாப்பின்றி நில அரிப்பு, மணல் குவாரி, ஆக்கிரமிப்புகளால் அழிந்து கொண்டிருக்கிறது. எனவே, அரிக்கமேட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தாக வேண்டும்.

முந்தைய அகழ்வாராய்ச்சிகளில், ஆம்போரே அரிடைன் ஜாடிகளும், மண்பாண்டங்களும், ரோமானிய விளக்குகளும், கண்ணாடிப் பொருட்களும், பலவித மணிகளும் கிடைத்துள்ளன. ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் உருவம் பொறித்த பொற்பதக்கமும் கிடைத்துள்ளது. அத்துடன் இந்த இடத்தில் கண்ணாடிப் பொருட்கள், மணிகள் தொழிற்சாலைக்கான கிடங்குகளும், சாயப் பட்டறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக பிராமி, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த 66 பானை ஓடுகளும் அதன் பழமைக்கு சான்றாகும். சமீபத்தில்கூட, ஆம்போரே ஜாடி ஒன்றின் கழுத்துப் பகுதி கிடைத்துள்ளது. இதை வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, குறைந்தது கி.மு., முதலாம் நூற்றாண்டுக்கானது என்று கருதுகின்றனர். அரிக்கமேட்டை சுற்றிய பல பகுதிகளிலும் பெருங்கற்காலப் புதை உறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, வரலாற்றுப் பாரம்பரியமிக்க தொல்பொருள் களஞ்சியமான அரிக்கமேட்டில், ஒரு விளக்க மையத்துடன் கூடிய கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அங்கு மீண்டும் விரிவான அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும்.தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்பொருள் தளங்களுக்கு மத்திய அரசு விரிவான அகழாய்வு செய்ய உதவி செய்வதை வரவேற்கிறோம். அதேபோல் பிரெஞ்சு கலாசாரத்தின் ஜன்னல் என போற்றப்படும் புதுச்சேரியில் இருக்கும் ஒரே ஒரு பழமை வாய்ந்த இடம் அரிக்கமேடு தான். ஆகவே, இதை உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X