தமிழ்நாடு

ஆங்காங்கே அருவி! ஆக்கிரமிப்புகளால் தடம் மாறும் நீர்;மழை காலத்தில் மண்சரிவு அபாயம்

Added : டிச 05, 2019
Advertisement
 ஆங்காங்கே அருவி! ஆக்கிரமிப்புகளால் தடம் மாறும் நீர்;மழை காலத்தில் மண்சரிவு அபாயம்

குன்னுார்:குன்னுார், பக்காசூரன் மலை; லேம்ஸ்ராக் மலை பகுதிகளை சுற்றி அடர்த்தியான வனங்களுக்கு இடையே ஆங்காங்கே உருவாகி உள்ள புதிய நீர்வீழ்ச்சிகள்; ஆக்கிரமிப்பால் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளை உறுதி செய்து வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், குன்னுார், பக்காசூரன் மலை; லேம்ஸ்ராக் மலை பகுதிகளை சுற்றி அடர்த்தியான வனங்களுக்கு இடையே காணப்பட்ட நீர்வீழ்ச்சி; இயற்கை காட்சிகள், நீலகிரிக்கான புதிய பாதையை அமைக்க, ஆங்கிலேயருக்கு துாண்டு கோலாக அமைந்தன .கடந்த, 1833ம் ஆண்டில், மெட்ராஸ் கவர்னராக இருந்த லுஷிங்டன், முயற்சியால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு மாட்டு வண்டி சாலை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, லெப்டினென்ட் லெகர்டி என்பவரால், 8 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் தெரு, வழியாக, முதன் முதலாக, 'காட் ரோடு' உருவாக்கப்பட்டது.1872ல் கர்னல் ஜி.வி.லா என்பவரால் லாஸ் நீர் வீழ்ச்சி மற்றும் காட்டேரி வழியாக, 45 டிகிரிக்கும் மேல் சாய்வான மலையில், புதிய சாலை அமைக்கப்பட்டது.

நாளடைவில், இப்பகுதியில், இயற்கை வனங்களை அழித்து, தேயிலை தோட்டங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறிய நிலையில், இப்பகுதியின் இயற்கை சமன்பாடு பாதிக்கப்பட்டது. அதன்பின், இயற்கையாக காணப்பட்ட, நீர் வழி தடங்கள் மறிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான காட்டேஜ்கள் கட்டப்பட்டன. இதனால், மழை காலங்களில் பேரிடர் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத சம்பவமாக மாறிவிட்டது.

குறிப்பாக, ஆண்டுதோறும், நவ., டிச., மாதங்களில், வடகிழக்கு பருவமழையின் போது இங்கு பாதிப்பு அதிகம் ஏற் படுகிறது. கடந்த, வாரம் முழுவதும் பெய்த கனமழையால், மரப்பாலம், பர்லியார், லேம்ஸ்ராக் வனப்பகுதிகளில், பல புதிய நீர்வீழ்ச்சிகள்; அருவிகள் உருவாகி உள்ளன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நீர் நிலைகள் உருவாகி, வெள்ளம் தடம் மாறி செல்வதால் நிலச்சரிவு, மண்சரிவு அதிகரித்து வருகிறது. இந்த பேரிடரை கட்டுப்படுத்த தொலை நோக்கு ஆய்வை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.


ஆய்வு அவசியம்...



நீலகிரி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் கூறுகையில்,''குன்னுார் மலை பகுதிகளில், தடம் மாறி செல்லும் நீரால், புதிய அருவிகள் உருவாவது, மழை கால அபாயத்தை உணர்த்துகிறது. கட்டுமானம்; தேயிலை தோட்டங்களுக்காக, ஏற்படும் நீர் நிலை தடையால், நிலச்சரிவு, மண்சரிவு அதிகரித்து சேதங்கள் தொடர்வதும் நீடிக்கிறது. இதனை ஆய்வு செய்து, தடைகளை அகற்றவில்லையேல், எதிர்காலத்தில் வரும் பேரிடரை தடுக்க முடியாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X