இந்தியா

நல்லுார் அரசு பள்ளி அருகில்  பிளாஸ்டிக் கழிவு அகற்றப்படுமா?

Added : டிச 05, 2019
Advertisement

திருபுவனை : நல்லுார் அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகே சாலையோரம் அகற்றப்படாமல் உள்ள ரசாயனக் கழிவுகள் அடங்கிய 'பிளாஸ்டிக் குப்பைகளை' அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதகடிப்பட்டு-மடுகரை சாலையில் நல்லுார் அரசு தொடக்கப் பள்ளி அருகில் கொசுவத்தி் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் கழிவுகள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு நல்லுார் அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகில் சாலையோரம் பல டன் அளவிற்கு கொட்டப்பட்டது.இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் அகற்றப்படாமல் சுகாதாரக்கேடாக உள்ளது.போக்குவரத்து நிறைந்த சாலையில் பள்ளிக்கு அருகில், கொட்டப்பட்டுள்ள மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை, அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X