பொது செய்தி

தமிழ்நாடு

தரமான பசுந்தேயிலை கொள்முதல் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி

Added : டிச 05, 2019
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் சாலீஸ்பரி தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், பசுந்தேயிலை சேகரிப்பு மேற்பார்வையாளர்களுக்கு, தரமான பசுந்தேயிலை கொள்முதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.குன்னுாரில், 'இன்கோ' மேலாண்மை இயக்குனர் சுப்ரியாசாஹூ தலைமையில், 'தரமான பசுந்தேயிலை கொள்முதல், பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்,' குறித்து, நீலகிரி

கூடலுார்:கூடலுார் சாலீஸ்பரி தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், பசுந்தேயிலை சேகரிப்பு மேற்பார்வையாளர்களுக்கு, தரமான பசுந்தேயிலை கொள்முதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

குன்னுாரில், 'இன்கோ' மேலாண்மை இயக்குனர் சுப்ரியாசாஹூ தலைமையில், 'தரமான பசுந்தேயிலை கொள்முதல், பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்,' குறித்து, நீலகிரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

அதன் அடிப்படையில், கூடலுார் சாலீஸ்பரி தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உள்ள பசுந்தேயிலை சேகரிப்பு மேற்பார்வையாளர்களுக்கு, நவீன தேயிலை சாகுபடி, தேயிலையின் தரம், தரமான பசுந்தேயிலை கொள்முதல் குறித்த சிறப்பு பயிற்சி முகாம், தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது.

முகாமில், தொழிற்சாலை கள விளக்குனர் மணிகண்டகுமார் பயிற்சி அளித்து பேசுகையில்,'' பசுந்தேயிலையை சுகாதாரமான இடத்தில் கொட்டி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். பைகளில், 35 கிலோவுக்கு மேல் பசுந்தேயிலை நிரப்ப கூடாது. இதனை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.முகாமில், ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X