பொது செய்தி

தமிழ்நாடு

'பிளாஸ்டிக்' சேகரிப்பு திட்டம் களத்தில் கல்லூரி மாணவியர்

Added : டிச 05, 2019
Share
Advertisement
குன்னுார்:நீலகிரியில், பால் பாக்கெட் பிளாஸ்டிக் கவர்களை வீடுதோறும் சென்று சேகரிக்க, குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி மாணவியர் களத்தில் இறங்கியுள்ளனர்.நீலகிரியில், கடந்த, 20 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாடுக்கு தடையுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றிற்கு, கடந்த செப். 1 முதல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.இந்நிலையில்,

குன்னுார்:நீலகிரியில், பால் பாக்கெட் பிளாஸ்டிக் கவர்களை வீடுதோறும் சென்று சேகரிக்க, குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி மாணவியர் களத்தில் இறங்கியுள்ளனர்.

நீலகிரியில், கடந்த, 20 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாடுக்கு தடையுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றிற்கு, கடந்த செப். 1 முதல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது

.இந்நிலையில், பெருநிறுவனங்களின் பிஸ்கெட், 'ஜங்புட' கவர்கள்; பால் பாக்கெட் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் நிலையில், அவையும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால், சுற்றுச்சூழலுக்கு, பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், குன்னூர்பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி மாணவியர் சார்பில், வீடுதோறும் சென்று பிளாஸ்டிக் கவர்களை சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

வண்டிச்சோலை பகுதியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லூரி என்.சி.சி., மாணவியர், பொதுமக்கள் மற்றும் கடைகளிலிருந்து பிளாஸ்டிக் கவர்களை வாங்கி, சேகரித்து நகராட்சியிடம் ஒப்படைத்தனர்.

என்.சி.சி., அலுவலர் சிந்தியா ஜார்ஜ் கூறுகையில்,''ஆவின் உட்பட பால் பாக்கெட்கள் மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பால் பாக்கெட்டுகளை, வாரம் தோறும், ஒரு நாள் வீடுகளில் சென்று மாணவியர் பெற்று, நகராட்சியிடம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. பால் கவர்களை, வெட்டும் போது, அதனை சேகரித்து வைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X