பொது செய்தி

தமிழ்நாடு

120 வயது ஆலமரம் வேருடன் இடம் மாற்றம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
திருவள்ளூர்: சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த ஆலமரம் தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை அருகே சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் ஆறுவழி சாலை பணிகள் நடந்து வருகின்றன.சாலை விரிவாக்க பணிகளுக்காக 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
120 வயது ஆலமரம் வேருடன் இடம் மாற்றம்

திருவள்ளூர்: சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த ஆலமரம் தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை அருகே சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் ஆறுவழி சாலை பணிகள் நடந்து வருகின்றன.சாலை விரிவாக்க பணிகளுக்காக 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து கோவையைச் சேர்ந்த 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் முயற்சியால் நேற்று ஆலமரத்தை வேருடன் பெயர்த்து மாற்று இடத்தில் நடும் பணி நடந்தது. ஆலமரத்தின் விழுதுகள் கிளைகளை வெட்டிய பின் மரத்தை சுற்றிலும் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வேருடன் கீழே சாய்த்தனர்.

கிளைகள் விழுதுகள் இல்லாத மரம் இரண்டு கிரேன்கள் மூலம் 1000 அடி தொலைவில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

'ஓசை' நிர்வாகி கே.சையது கூறியதாவது: இதுவரை 200க்கும் மேற்பட்ட மரங்களை மாற்று இடத்தில் வைத்து மறுவாழ்வு அளித்து உள்ளோம். மரங்கள் தான் நம் மூச்சு காற்று. அதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

ஒரு மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற மரங்கள் என்றால் நுாறு ஆண்டுகள் ஆகும். மரங்களை பாதுகாக்க வேண்டும். எந்த பகுதியிலும் மரங்களை மாற்று இடத்தில் வைக்க சேவை மனப்பான்மையுடன் உதவ தயாராக உள்ளோம். எங்களை 70103 50066, 84288 59911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X