டாக்டர் பலாத்கார கொலை:விரைவு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
பெண் டாக்டர் பலாத்கார கொலை: விரைவு நீதிமன்றம்

ஐதராபாத்: தெலுங்கானாவில், பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை, விரைவு நீதிமன்றம் விசாரிக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. இங்கே, தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள ஷம்சாபாத் சுங்கச் சாவடி பகுதியில், பிரியங்கா ரெட்டி, 26 என்ற கால்நடை டாக்டரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில், லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news


இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என, தெலுங்கானாவில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் நீதி கிடைக்க, இந்த வழக்கு விசாரணையை, விரைவு நீதிமன்றத்தில் நடத்த, தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில சட்டத்துறை செயலர் சந்தோஷ் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மகபூப்நகரில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றம், விரைவு நீதிமன்றமாக செயல்பட்டு, பெண் டாக்டர் கொலை வழக்கை விசாரித்து, விரைவில் நீதி வழங்கும்' என, தெரிவித்துள்ளார். 0


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
05-டிச-201910:06:20 IST Report Abuse
Rajan ,அதான் போலீஸ் ப்ரோவ் பண்ணிட்டாங்க இல்ல ,JUST FINISH THEM IN PUBLIC ,FOUR BULLETS IN THEIR SECRET PART
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
05-டிச-201909:50:08 IST Report Abuse
Krishna Let There be Fast-Track Investigation & Trial for Neutral Unbiased Justice (Incl. Full Punishment of Real Convicts Instead of Punishing some Scapegoats without Influence of Media or Pro-Women Propaganda With Exemplary Punishments (Incl. Complainants if found negligent). Police Must Also Investigate If Anti-Men Women Fanaticists Or Media Or Politicians-Rulers are Doing these Crimes & Media Propaganda For Diverting People Attention From India's Problems or Opposition to Topple Govts (they will do anything & everything for their vested interests). Its happening One by One and in different Places.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
05-டிச-201907:40:04 IST Report Abuse
RajanRajan எந்த நீதிமன்றம் வழக்கை விசாரித்தால் இந்த குற்றவாளிகளை தண்டிக்க ஒரு பத்து வருஷம் வரை ஆகும். ஏன்னா நம்மூரு கோர்ட் ப்ரொஸிட்டிங்ஸ் அந்த அளவுக்கு குற்றவாளிகளை பாதுகாக்க முயன்று தோல்வி கண்ட பின்பு தான் தண்டனை புத்தகத்தையே புரட்டுவாங்க. அதுக்குள்ளே இதே மாதிரி கேஸுகள் ஆயிரத்தை தாண்டிவிடும். எல்லோரும் ஜனநாயகம் வாழ்கன்னு பேஷா கை தட்டுங்க பார்க்கலாம். கட்டுக்கோப்பில்லாத சுதந்திரம் உரிமைகள் தேவையா என்பதை யார் முடிவு செய்ய வேண்டும். அரசாங்கமா மக்களா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X