பொது செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டு பழைய காற்றாலைகள் மூடல்

Added : டிச 05, 2019
Advertisement
20 ஆண்டு பழைய காற்றாலைகள் மூடல்

சென்னை: தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்து கேட்பில் பங்கேற்றவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள காற்றாலைகளை மூடும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் பல நிறுவனங்கள் 8,500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஆணையம் நிர்ணயித்த விலைக்கு மின் வாரியம் வாங்குகிறது.
மின் வாரியம் சார்பில் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள காற்றாலைகளை மூடி விட்டு புதிதாக நிறுவுவது தொடர்பாக நடப்பாண்டு துவக்கத்தில் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அதன் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் முதலீட்டாளர்களிடம் கருத்துக்களை கேட்டனர்.அதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: காற்றாலைகளில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு மின் வாரியம் குறித்த காலத்தில் பணம் தருவதில்லை.

தமிழக அரசு 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள காற்றாலைகளை மூடுவது தொடர்பாக தனி கொள்கை வெளியிடவில்லை. இதனால் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கருத்தை ஏற்று அதை செயல்படுத்த முடிவு செய்வது தவறு. மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் காற்றாலைகளின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என உள்ளது.

இதனால் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் என நிர்ணயிப்பதிலும் இறுதி முடிவு எட்டவில்லை. அதற்குள் 20 ஆண்டுகள் ஆன ஆலையை மூட முற்சிக்க கூடாது. மின் வாரியத்தின் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன; அதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலைகளை ஆயுட்காலம் என்ற பெயரில் அகற்ற முடிவு செய்வது தவறு. எனவே வாரிய மனுவை ஏற்க கூடாது என ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X