சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொட்டகையில் பசுவை கொன்றது புலி : அச்சத்தில் மக்கள்; கேமரா பொருத்திய வனத்துறை

Added : டிச 05, 2019
Advertisement
 கொட்டகையில் பசுவை கொன்றது புலி : அச்சத்தில் மக்கள்; கேமரா பொருத்திய வனத்துறை

கூடலுார்:கூடலுார், தொரப்பள்ளி அருகே, கொட்டகையில் புகுந்து, பசுமாட்டை புலி தாக்கி கொன்ற சம்பவத்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகம் எல்லையை ஒட்டி, கூடலுார் தொரப்பள்ளி குணியல்வயல் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் கல்யாணி. தனது மகன் சதீசுடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு, 1:30 மணிக்கு, கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டின் சப்தம் கேட்டது. சதீஷ் வெளியே சென்று பார்த்த போது பசுமாட்டை, புலி தாக்கியது தெரியவந்தது.அவரும் சப்தம் எழுப்பி உள்ளார்.

உடனே புலி அங்கிருந்து ஓடி உள்ளது. புலி தாக்கியதில் படுகாயமடைந்த மாடு இறந்தது. முதுமலை வன ஊழியர்கள் இறந்த மாட்டின் உடலை ஆய்வு செய்து, மாட்டை தாக்கி கொன்றது, புலி என்பதை உறுதி செய்தனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இரவில், புலி நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக, முதுமலை வனத்துறை சார்பில், மூன்று இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அப்பகுதியை சேர்ந்த சுனில் கூறுகையில், ''பசு மாட்டை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புலி மீண்டும் ஊருக்குள் வரும் என்பதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். முதுமலை வனத்தை ஒட்டிய அகழியை சீரமைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X