பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை தூளில் கலப்படம் வேண்டாம்: உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கை பாயும்

Added : டிச 05, 2019
Advertisement

ஊட்டி:'நீலகிரியில் தேயிலை துாளில் கலப்படம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான தேயிலை துாள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், - 2006ன் கீழ், தரத்தை உறுதி செய்யும் வகையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

தேயிலை துாளில் கலப்படம் செய்வது கண்டறியப்படுமானால், உணவு பாதுகாப்பு சட்டப்படி, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.தேயிலை தயாரிப்பாளர்கள், தேயிலை ஏல விற்பனை மையம், மறு பொட்டலம் இடுவோர் மற்றும் மொத்த, சில்லரை விற்பனையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக, இந்த விதிகளை பின்பற்ற வேண்டும்.

அதில், 'உணவு பொருளின் பெயர், உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பாளர், மறுபொட்டலமிடுவோர், வினியோகஸ்தர் முழு அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், தயாரிப்பு மற்றும் பொட்டலமிட்ட தேதி, உபயோகப்படுத்துவதற்கான காலம், நிகர எடை, தொகுப்பு எண், விலை மற்றும் ஊட்டச்சத்து விபரம், சேர்மான பொருட்கள் மற்றும் சைவ குறியீடு, பொட்டலப்படுத்துதல்' உட்பட அனைத்து விதிகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இந்த தகவல்கள் இல்லாத தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கையுடன், அபராதமும் விதிக்கப்படும்.தேயிலை துாளில் கலப்படம், போதை பொருள் விற்பனை குறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, 'வாட்ஸ்-ஆப்' புகார் எண்: 94440 42322 மற்றும் நீலகிரி கலெக்டர் புகார் எண்: 99431 26000 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X