ஆபத்தான பயணத்தில் தொழிலாளர்கள் நடவடிக்கை எடுப்பது அவசியம்

Added : டிச 05, 2019
Advertisement

கோத்தகிரி:'கோத்தகிரி பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் 'பிக்-அப்' வாகனங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதை தடுக்கவேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, பசுந்தேயிலை பறிப்பது சவாலாக உள்ளது. இந்நிலையில், எஸ்டேட் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூடுதல் கூலி வழங்கி, பணியமர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பசுந்தேயிலை பறிக்கின்றனர் என்பதால், அவர்களுக்கு வாகன வசதியும் ஏற்படுத்தி கொடுக்கின்றனர்.இவ்வாறு, வாகனங்களில் செல்லும் பெண் தொழிலாளர்கள், தாங்கள் பறித்த பசுந்தேயிலை 'பிக்-அப்' உள்ளிட்ட வாகனங்களில் லோடு ஏற்றி, தேயிலை மூட்டைகளின் மேல், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அமர்ந்து வருகின்றனர்.

வளைவுகள் நிறைந்த, செங்குத்தான சாலைகளில் வாகனங்கள் சென்று வரும்போது, பசுந்தேயிலை மூட்டைகள் சரியும் பட்சத்தில், தொழிலாளர்களும் விழும் அபாயம் உள்ளது. இதனால், உயிரிழப்பு உள்ளிட்ட, அசம்பாவிதம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் காலை மற்றும் மாலை நேரங்களில், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X