பொது செய்தி

தமிழ்நாடு

எச்.ஐ.வி., இல்லாத சமுதாயம் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுரை

Added : டிச 05, 2019
Advertisement
 எச்.ஐ.வி., இல்லாத சமுதாயம் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுரை

குன்னுார்:'புதிய எச்.ஐ.வி., தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்குவது அனைவரின் கடமையாகும்,' என, தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி இந்திய குடும்ப நல சங்கம் சார்பில், குன்னுார் பிரகதி தொழிற்பயிற்சி மையத்தில், 'உலக எய்ட்ஸ் தினம்' கடைபிடிக்கப்பட்டது. மைய மேலாளர் பிரீத்தி தலைமை வகித்தார். பயிற்சியாளர் மரியா வரவேற்றார்.நீலகிரி கிளை மேலாளர் வரதராஜன் பேசுகையில், ''ஆண்டுதோறும் டிச., 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பரிசோதனை, மருத்துவம் ஆகிய சேவைகளுக்கு அரசால் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

இதன் மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. நோயாளிகளை புறக்கணிக்கும் கண்ணோட்டத்தை முற்றிலும் நீக்க முயற்சி நடக்கிறது. இதனால், சமுதாய மாற்றம் ஏற்படும்,''என்றார்.பொருளாளர் புவனேஸ்வரி பாக்கியநாதன் பேசுகையில்,'' எச்.ஐ.வி., தொற்று உள்ளவர்கள் புறக்கணிப்பது இல்லை என்ற நிலையும், புதிய எச்.ஐ.வி., தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்குவதும் அனைவரின் கடமையாகும்.

சமூகத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றிய தவறான புரிதலால் மக்களிடையே தேவையற்ற அச்சம் உள்ளது. ஆரம்ப நிலையிலேயே சரியான ஆலோசனை, மருத்துவம் கிடைக்க பெற்றால் மரணம் தவிர்க்க முடியும்,''என்றார்.தொடர்ந்து, நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமையில், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, விழிப்புணர்வு வினாடி--வினா நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, கிளை தலைவர் பிரேம் ஆனந்த் பரிசுகளை வழங்கினார். திட்ட அலுவலர் ராஜேஷ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X