பொது செய்தி

தமிழ்நாடு

30 ஆதிவாசி குடும்பங்களுக்கு ரூ.8 லட்சத்தில் சமையலறை வசதி

Added : டிச 05, 2019
Advertisement

மஞ்சூர்:நெடுகல் கம்பையில், 30 ஆதிவாசி குடும்பங்களுக்கு, வனத்துறை மூலம், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமையலறை கட்டி கொடுக்கப்பட்டது.

மஞ்சூர் அருகே நெடுகல் கம்பையில், 30க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் சமையலறை வசதி இல்லை. அங்கு ஆய்வுக்கு சென்ற மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா பொதுமக்கள் மத்தியில் குறை கேட்டார். அப்போது, 'தங்களது வீடுகளில் தனி சமையலறை வசதி இல்லாததால் அதனை கட்டி கொடுக்க வேண்டும்,' என, கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி, நெடுகல் கம்பை கிராம வனக்குழு மற்றும் வனத்துறையின் சூழல் மேம்பாட்டு திட்ட நிதியின் மூலம், 8.50 லட்சம் மதிப்பீட்டில், 30 பழங்குடியினர் வீடுகளுக்கு சமையலறை கட்டி கொடுக்கப்பட்டது.அங்கு நடந்த நிகழ்ச்சியில், குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா பங்கேற்று சமையலறை கட்டடங்களை திறந்து வைத்தார். ஊர் தலைவர் ரங்கசாமி, ராமன் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X