இந்தியாவுடன் வர்த்தக தொடர்பு ரத்து; பாக்.,கில் பாதிப்பு

Updated : டிச 05, 2019 | Added : டிச 05, 2019 | கருத்துகள் (12)
Advertisement

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே பாகிஸ்தானில் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணம் என அந்நாட்டு அமைச்சர் ஹமத் அசார் தெரிவித்துள்ளார்.






காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ஆக. 5-ல் ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் அரசு உடனடியாக இந்தியாவுடனான ராஜாங்க மற்றும் வர்த்தக ரீதியிலான உறவுகளை துண்டித்தது.

இதனால் இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டனர். இதனால் பாகிஸ்தானில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பாக்.,மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.





இந்நிலையில், பாக்., பொருளாதார விவகாரங்கள் துறை மந்திரி ஹமத் கூறுகையில்,'நாட்டில் நிலவிவரும் உணவு பொருட்கள் மீதான விலை உயர்வுக்கு இந்தியாவுடன் வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே முக்கிய காரணம். மேலும், பருவநிலை மற்றும் இடைத்தரகர்கள் காய்கறிகளை பதுக்கி வைப்பதும் விலை உயர்வுக்கு


காரணம்.


விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி,-பிப்ரவரி மாதங்களில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்' என அவர் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
05-டிச-201917:33:44 IST Report Abuse
 Sri,India பாக்கிஸ்தான் ,சீனா ,இலங்கை கடுமையான பொருளாதார சிக்கலை சந்திக்கப்போகிறது
Rate this:
Share this comment
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
05-டிச-201914:57:19 IST Report Abuse
Dinesh Pandian ஹைதெராபாத் ஆனியன் 50 ரூபாய் .....
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
05-டிச-201910:12:39 IST Report Abuse
Nathan இதுக்கெல்லாம் சூழ்ச்சி அரசியலை மோடி கடைபிடிப்பதே காரணம். அவங்க தடை விதித்தாலும், நாம அவங்க பார்டரில் கூடைகளை வைத்து விட்டு, பணத்தை ஹவாலா பண்ணு, ஜமாத்துக்கு வந்துடும்னு , துண்டு சீட்டு வெச்சா, பாவம் அவங்க கஷ்ட பட மாட்டாங்க இல்ல. மோடி ஒயிக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X