பொலிவிழந்த 'ஆடம்ஸ்' நீரூற்று சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : டிச 05, 2019
Advertisement
 பொலிவிழந்த 'ஆடம்ஸ்' நீரூற்று சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி:ஊட்டி, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள 'ஆடம்ஸ்' நீரூற்று பகுதி பொலிவிழந்து காணப்படுகிறது.

ஊட்டி, சேரிங்கிராஸ் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட, 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. ஊட்டியின் பாரம்பரிய மிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பகுதியை, சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலா பயணிகள், விளக்குடன் கூடிய, நீரூற்று ஒளியில், 'போட்டோ' எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சீசன் சமயத்தில் மட்டும் 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்தும் நகராட்சி நிர்வாகம் பின், கண்டுகொள்வதில்லை.தினமும் பல ஆயிரம் வாகனங்கள் நீரூற்றை கடந்து செல்வதால், வாகனங்களில் புகை சூழ்ந்து நிறம் மாறியதுடன், அங்கு அமைக்கப்பட்ட விளக்குகள் பழுதாகியுள்ளது. தண்ணீரும் வருவதில்லை. மாலை நேரங்களில் மின் ஒளியில் அதன் அருகே நின்று படமெடுக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ஊட்டிக்கு, சுற்றுலா பயணிகள் கணிசமாக வருகை தருவதால், 'ஆட்ம்ஸ்' நீரூற்றை எப்போதும் பொலிவுடன் காட்சியளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X