பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி-மஞ்சூர் சாலை சீரமைப்பு மூன்று வாரங்களில் நிறைவுபெறும்

Added : டிச 05, 2019
Share
Advertisement
ஊட்டி:'ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலை சீரமைப்பு பணி வேகமாக நடந்து வருவதால் இன்னும் மூன்று வாரங்களில் முடிந்து விடும்,' என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையில் தேவர்சோலை பகுதியில் குறுகலான சாலையை தடுப்பு சுவர் அமைத்து அகலப்படுத்தும் பணியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கி பணிகள் நடந்து வருகிறது. இச்சாலையில்
 ஊட்டி-மஞ்சூர் சாலை சீரமைப்பு மூன்று வாரங்களில் நிறைவுபெறும்

ஊட்டி:'ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலை சீரமைப்பு பணி வேகமாக நடந்து வருவதால் இன்னும் மூன்று வாரங்களில் முடிந்து விடும்,' என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையில் தேவர்சோலை பகுதியில் குறுகலான சாலையை தடுப்பு சுவர் அமைத்து அகலப்படுத்தும் பணியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கி பணிகள் நடந்து வருகிறது. இச்சாலையில் சென்று வந்த இலகு, கனரக வாகனங்கள் அனைத்தும் அதிகரட்டி, குன்னக்கொம்பை வழியாக சென்று வருகிறது.

சாலையிலிருந்து சுமார், 20 அடிக்கு தடுப்பு சுவர் எழுப்ப வேண்டியுள்ளது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் சாலை பணியை விரைவாக மேற்கொள்ள இடையூறு ஏற்பட்டுள்ளது. பணியை வேகப்படுத்த தற்போது, பொக்லைன் உதவியுடன் துரித கதியில் பணிகள் நடந்து வருகிறது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ' சாலை பணி துவக்கிய நாளிலிருந்து தொடர்ந்து, சாரல் மழை பெய்து வருவதால் பணியை வேகப்படுத்த இடையூறு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், பணி வேகமாக நடந்து வருகிறது. இன்னும் மூன்று வாரங்களில்் முடிந்துவிடும்,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X