சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரம் : தவறு கிடையாது: தலைமையாசிரியர் பதில்

Added : டிச 05, 2019
Advertisement
 பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரம் : தவறு கிடையாது: தலைமையாசிரியர் பதில்

பந்தலுார்:பந்தலுார் அருகே, கையுன்னி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், பழமையான மரம் வெட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பந்தலுார் அருகே கையுன்னி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அலுவலகத்தின் முகப்பில் பழமையான மாமரம் ஒன்று இருந்தது. இதன் மேல்பகுதி கிளைகள் காய்ந்துள்ளன.இதனால் இந்த மரத்தை வெட்டி அகற்ற பள்ளி நிர்வாகம் வருவாய் துறையிடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி வழங்காத நிலையில், கடந்த, 1ம் தேதி, பி.டி.ஏ., நிர்வாகிகள், மரத்தை அடியோடு வெட்டி அகற்றியுள்ளனர்.

இந்த சாலையோரத்தில், நாள்தோறும் வனத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் தினசரி வந்து செல்லும் பகுதியில், இதுபோன்ற செயல் நடந்துள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி தலைமையாசிரியர் ரமாதேவி(பொ) கூறுகையில், ''மரத்தின் கிளைகள் காய்ந்து இருந்தது. இதனை வெட்ட, அனுமதி கோரினோம். கிடைக்கவில்லை. கிளைகள் விழுந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அனுமதியில்லாமல் மரத்தை வெட்டியதில் தவறு ஏதும் கிடையாது,'' என்றார்.

மக்கள் கூறுகையில், 'மாணவர்கள் மத்தியில், ஒரு பக்கம் மரம் வளர்ப்பு விழிப்புணர்வும்; மறுபக்கம் இதுபோன்று, அரசு விதிகளை மதிக்காமல், பள்ளி வளாகத்தில் மரம் வெட்டுவதும் ஏற்று கொள்ள முடியாததாகும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டருக்கு புகார் அளிப்போம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X