பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., நிகழ்ச்சி புறக்கணிப்பு

Added : டிச 05, 2019
Advertisement

மூணாறு : தேவிகுளம் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள் ளது.கேரளா, மூணாறில் டிச., 1ல் மார்க்சிஸ்ட் சார்பில் அரசியல் விளக்கக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நேரு குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., கட்சியினர் தொகுதி முழுவதும் எம்.எல்.ஏ., வின் உருவ பொம்மையை எரித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் எம்.எல்.ஏ., வுக்கு ஆதரவாக ஊர்வலங்களை நடத்தினர்.இந்நிலையில் தேவிகுளம் தொகுதியில் எம்.எல்.ஏ., பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள் ளது. மூணாறில் டிச., 8 ல் கண்டன கூட்டம் நடைபெறும் என்றும், எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்காதபட்சத்தில், அவரை வழிமறித்து தடுப்பது உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என இடுக்கி மாவட்ட காங்., தலைவர் இப்ராஹிம்குட்டிகல்லார் தெரிவித் தார்.-----------வழக்கு: இப்பிரச்னை தொடர்பாக அடிமாலி, மன்னான்கண்டத்தைச் சேர்ந்த பினோய் சபாஸ்டியன் 44, என்பவர் பேஸ்புக்'கில், எம்.எல்.ஏ., மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதுாறாக பதிவிட்டார். மூணாறு டி.எஸ்.பி., ரமேஷ்குமாரிடம், எம்.எல்.ஏ., புகார் அளித் தார். அதன்படி பினோய் சபாஸ்டியன் மீது மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X