மாவட்ட அளவில் சமகிர சிக்சா விளையாட்டு போட்டிகள்| Dinamalar

மாவட்ட அளவில் 'சமகிர சிக்சா' விளையாட்டு போட்டிகள்

Added : டிச 05, 2019
Share
ஊட்டி:ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில், மாவட்ட கல்வித்துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் 'சமகிர சிக்சா' என்ற புதிய திட்டத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளிகள் மட்டும் பங்கேற்ற இப்போட்டியை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாய்ராம் துவக்கி வைத்தார். இதில், கேரம், இறகுப்பந்து போட்டிகளில், 15 அரசு பள்ளிகளில் இருந்து, 90

ஊட்டி:ஊட்டி அண்ணா உள்விளையாட்டு அரங்கில், மாவட்ட கல்வித்துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் 'சமகிர சிக்சா' என்ற புதிய திட்டத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.

மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளிகள் மட்டும் பங்கேற்ற இப்போட்டியை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாய்ராம் துவக்கி வைத்தார். இதில், கேரம், இறகுப்பந்து போட்டிகளில், 15 அரசு
பள்ளிகளில் இருந்து, 90 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் தனித்தனியாக நடந்தது.

தொடர்ந்து, ஊட்டி ஜோசப் பள்ளி மைதானத்தில், கால்பந்து போட்டி, எச்.ஏ.டி.பி., மைதானத்தில் கைப்பந்து போட்டி, ஏ.டி.சி., காந்தி மைதானத்தில், 'கோ கோ' மற்றும் கபடி போட்டிகள் இன்று
(5ம் தேதி) நடக்கிறது.தடகள போட்டிகள் ஜோசப் பள்ளி மைதானத்தில், நாளையும் நடக்கிறது. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதற்காக ஏற்பாடுகளை, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்
விஜயகுமார் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி உட்பட, உடற்கல்வி ஆசிரியர்
மற்றும் ஆசிரியைகள் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X