பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர்தொட்டி கட்டுமான பணி துவக்கம்

Added : டிச 05, 2019
Advertisement

தேவதானப்பட்டி:ஜி கல்லுப்பட்டியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை தொட்டி கட்டும் பணி துவங்கியது.பெரியகுளம் ஒன்றியம் ஜி கல்லுப்பட்டியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் தேவைக்காக எட்டு கிலோமீட்டர் தூரமுள்ள மஞ்சளாறு வாழை என்ற இடத்தில் திறந்தவெளி கிணறு அமைத்து குழாய் மூலம் மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றி சப்ளை செய்யப்படுகிறது.மேல்நிலைத் தொட்டிகள் உயரமான இடத்தில் மேடான பகுதியில் அமைந்துள்ளதால் குடிநீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பிரச்னை ஏற்பட் டது. இந்நிலையில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.20 லட்சம் செலவில் தண்ணீர் தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்கான பங்களிப்பு தொகை ஜி கல்லுப்பட்டி ஆர் டி யு தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இதையடுத்து 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தரைத்தொட்டி அமைக்க பூமி பூஜை செய்து பணிகள் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X