கம்பம்,:வீடுகளில் முடங்கிக் கிடங்கும் மூத்த குடிமக்களை கவுரவிக்கவும், அவர் களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் கம்பம் நாலந்தா இன்னேவேசன் பள்ளி நிர்வாகம் நிகழ்ச்சி நடத்தியது. பள்ளியில் எல்.கே.ஜி.யூ.கே.ஜி. படிக்கும் மாணவர்களின் தாத்தா, பாட்டிகள் பங்கேற்றனர். தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மலர்விழி முன்னிலை வகித்தார். முதல்வர் மோகன் வரவேற்றார். மாணவர்களுடன் தாத்தா, பாட்டிகளை பேச வைத்தனர். பின்னர் மூத்த குடிமக்களின் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வீட்டில் தனியாக வயதான காலத்தில் மனஇறுக்கத்தில் இருப்போருக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும் என தாளாளர் தெரிவித்தார்.