பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு 'விறுவிறு'; முதல்கட்டம் 5; இரண்டாம் கட்டம் 7 ஒன்றியம்

Added : டிச 05, 2019
Advertisement
கோவையில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு 'விறுவிறு'; முதல்கட்டம்  5; இரண்டாம் கட்டம் 7 ஒன்றியம்

கோவை : கோவை மாவட்டத்தில், முதல் கட்டமாக 5 ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக 7 ஒன்றியங்களிலும், உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

கோவை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:வரும், 27ம் தேதி (வெள்ளிக்கிழமை), 30ம் தேதி (திங்கட்கிழமை) என இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தில், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 27ம் தேதி முதல்கட்டமாகவும், காரமடை, அன்னுார், சர்க்கார் சாமக்குளம், பெரியநாயக்கன் பாளையம், சூலுார், தொண்டாமுத்துார், சுல்தான்பேட்டை ஆகிய ஒன்றியங்களில், 30ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவும் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் அடிப்படை வசதிகள் இருப்பதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுப்பெட்டிகள், ஓட்டுப்பதிவுக்கான படிவங்கள், கையேடு, இதர உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.வேட்பு மனு பெறும் நாள் முதல் தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஓட்டு எண்ணும் மையங்களில் அதிவேக இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையங்களாக தேர்வு செய்துள்ள பள்ளிகளை, வரும், 23ம் தேதியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக பகுதிகளில் போஸ்டர், பேனர், சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும்.

100 சதவீதம் விதிமுறையை பின்பற்றுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அமைதியாக, வெளிப்படையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் ராஜாமணி பேசினார்.போலீஸ் எஸ்.பி., சுஜித்குமார், டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) முத்துக்கருப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


எவ்வளவு பதவி?


கோவை மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 228 கிராம ஊராட்சி தலைவர், 2,034 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கு ஓட்டளிக்க, நான்கு விதமான கலர்களில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் - மஞ்சள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - பச்சை, ஊராட்சி தலைவர் - ரோஸ், கிராம ஊராட்சி உறுப்பினர் - வெள்ளை நிற ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X