தமிழ்நாடு

3,697 சர்க்கரை ரேஷன் கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றம்

Added : டிச 05, 2019
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் 3,697 சர்க்கரை ரேஷன் கார்டுகள் அரிசி பெறும் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சர்க்கரை மட்டும் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் பலர் அரிசி மற்றும் அனைத்து பொருட்களும் பெறும் கார்டுகளாக மாற்ற கோரி வந்தனர். சர்க்கரை கார்டாக மாற்றப்பட்ட பின் திரும்பவும் அரிசி கார்டுகளாக மாற்ற இயலாது என உணவு வழங்கல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் அரசு சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டாக மாற்ற அனுமதி வழங்கியது. தேனி மாவட்டத்தில் சர்க்கரை மட்டும் பெற 8,240 கார்டுகள் இருந்தன.தற்போது அரசு வழங்கிய வாய்ப்பினை பயன்படுத்தி 3,697 சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றம் செய்து கொண்டனர்.இவர்கள் இம்மாதம் முதல் அரிசி, பொங்கல் பரிசு தொகை பெறும் வாய்ப்பு பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X