இந்தியா

காட்டான் குளத்தில் தண்ணீர் தேக்கம்

Added : டிச 05, 2019
Share
Advertisement
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு ஐத்தாலம்மன் கோவில் பின்புறம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் துார்வாரப்பட்ட குளத்தில் தொடர் மழை காரணமாக தண்ணீர் நிரம்பி வருகிறது.புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்கள் 'நீரும் ஊரும்' திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதியுதவியுடன் துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், கூனிச்சம்பட்டு
 காட்டான் குளத்தில் தண்ணீர் தேக்கம்

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு ஐத்தாலம்மன் கோவில் பின்புறம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் துார்வாரப்பட்ட குளத்தில் தொடர் மழை காரணமாக தண்ணீர் நிரம்பி வருகிறது.

புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்கள் 'நீரும் ஊரும்' திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதியுதவியுடன் துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், கூனிச்சம்பட்டு ஐத்தாலம்மன் கோவில் பின்புறம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளம் இருந்ததே தெரியாத வகையில் மறைக்கப்பட்டிருந்த காட்டான் குளம், கலெக்டர் அருண் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோரின் முயற்சியால், கடந்த 8ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு துார்வாரப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கொம்யூன் பஞ்சாயத்து மூலம் துார்வாரப்பட்ட காட்டான் குளத்தில், தொடர்ந்து தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால், குளத்தை சுற்றிலும் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X