இந்தியா

கைவினைப் பொருட்கள் விழிப்புணர்வு முகாம்; சுற்றுலாத் துறை இயக்குனர் துவக்கி வைப்பு

Added : டிச 05, 2019
Advertisement
 கைவினைப் பொருட்கள் விழிப்புணர்வு முகாம்; சுற்றுலாத் துறை இயக்குனர் துவக்கி வைப்பு

புதுச்சேரி : கைவினைப் பொருட்கள் விழிப்புணர்வு முகாமை, சுற்றுலாத் துறை இயக்குனர் முகமது மன்சூர் துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலகம், கைவினைப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்தவும், கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, கைவினைப் பொருட்கள் விழிப்புணர்வு முகாமிற்கு புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமை, சுற்றுலாத் துறை இயக்குனர் முகமது மன்சூர் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலக உதவி இயக்குனர் வினோத்குமார், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கிராமத்தின் மேலாளர் பாஸ்கர், டெரகோட்டா கைவினைக் கலைஞர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடக்கும் விழிப்புணர்வு முகாமில், 50க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டனர். கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவது, எப்படி காட்சிப்படுத்துவது, ஆன் லைன் வர்த்தகம், ஏற்றுமதி செய்வது குறித்து, நிபுணர்கள் பயிற்சி அளித்தனர்.முகாமில், கடலுாரை சேர்ந்த டெரகோட்டா கலைஞர் சம்பத்குமார், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மரச் சிற்ப கலைஞர் வரதன், கிருஷ்ணா நகரை சேர்ந்த ஐம்பொன் சிற்ப கலைஞர் சிவசங்கரன், மூலக்குளத்தை சேர்ந்த காகிதகூழ் பொம்மை கலைஞர் அருள் டேவிட் ஆகியோர் செயல் விளக்கம் அளித்தனர்.இதன் தொடர்ச்சியாக, வில்லியனுாரில் இன்றும், தென்னல் கிராமத்தில் நாளையும் விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X