கம்பம்:கடந்த சில நாட்களாக மேகமலையில் ைஹவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தனியார் எஸ்டேட்டுகள் இரவங்கலாறு உள்ளிட்ட சில பகுதிகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட் டது. இதனால் சின்னமனுாரில் இருந்து சென்ற வாகனங்களை வனத்துறையினர் அனுமதிக்க வில்லை.இந்நிலையில் அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு, மரங்களை அகற்றியும், மண் சரிவை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர். நேற்று காலை முதல் மேகமலை பகுதிக்கு பஸ் போக்குவரத்து சீரானது. சுற்றுலா பயணிகளும் செல்லத்துவங்கினர்.