புதுச்சேரி : புதுச்சேரி சட்டக் கல்லுாரியில் படித்தவர்கள், 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து வெள்ளி விழாவை கொண்டாடினர்.
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், கடந்த காலத்தில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டது.கடந்த 1991- 94ம் ஆண்டுகளில் மாலை நேர எல்.எல்.பி., சட்டப் படிப்பு படித்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த வெள்ளி விழா, ஓட்டல் செண்பகாவில் நடந்தது.விழாவில், கல்லுாரியின் முன்னாள் முதல்வரும், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தாவூது அன்னுசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
எல்.எல்.பி., படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர்களையும், சட்டக் கல்லுாரியில் படித்து வழக்கறிஞராக பணியாற்றி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மரி அன்னா தயாவதி, இளஞ்செழியன் ஆகியோரை பாராட்டியும் நினைவு பரிசுகள் வழங்கினார்.முதல்வரின் பார்லிமெண்ட் செயலர் லட்சுமிநாராயணன் சிறப்புரையாற்றினார். விழாவில் கலந்து கொண்டவர்கள், 25 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லுாரி கால நிகழ்வுகளை பேசி மகிழ்ந்தனர்.