கவர்னர், டி.ஜி.பி., பாணியில் எஸ்.எஸ்.பி., மக்கள் சந்திப்பு| Dinamalar

இந்தியா

கவர்னர், டி.ஜி.பி., பாணியில் எஸ்.எஸ்.பி., மக்கள் சந்திப்பு

Added : டிச 05, 2019
Share
புதுச்சேரி : கவர்னர், டி.ஜி.பி.,யை தொடர்ந்து சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வாலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கி உள்ளார். புதுச்சேரி மாநில டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட பாலாஜி ஸ்ரீவஸ்தவா, கவர்னர் கிரண்பேடியை பின்பற்றி கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முதல் பொதுமக்கள், போலீசார் குறைகளை கேட்க, தினமும் மக்கள் சந்திப்பு புதிய திட்டத்தை துவக்கினார்.அதன்படி தினமும் காலை 11:00 மணி முதல்

புதுச்சேரி : கவர்னர், டி.ஜி.பி.,யை தொடர்ந்து சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வாலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கி உள்ளார்.

புதுச்சேரி மாநில டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட பாலாஜி ஸ்ரீவஸ்தவா, கவர்னர் கிரண்பேடியை பின்பற்றி கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முதல் பொதுமக்கள், போலீசார் குறைகளை கேட்க, தினமும் மக்கள் சந்திப்பு புதிய திட்டத்தை துவக்கினார்.அதன்படி தினமும் காலை 11:00 மணி முதல் பகல் ஒரு மணிவரையிலும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரையிலும் அவரது அலுவலகத்தில், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இவர்களை தொடர்ந்து தற்போது புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வாலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மக்கள் சந்திப்பு நடைபெறும். இதில், சீனியர் எஸ்.பி.,யை சந்திக்க முன் அனுமதி தேவையில்லை. இந்த சந்திப்பு மூலம் பொதுமக்கள் தங்களுடைய குறைகள், புகார்கள், போலீஸ் துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X