தேவாரத்தில் துப்புரவு பணிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேவாரத்தில் துப்புரவு பணிகள் தீவிரம்

Added : டிச 05, 2019

தேவாரம்:தேவாரத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவது குறித்த 'தினமலர்' செய்தி எதிரொலியாக தீவிர துப்புரவு பணியைபேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.தேவாரம் ராமர் காலனி பகுதியில் அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன் 46, காய்ச்சல் பாதிப்பால் கடந்த வாரம்உயிரிழந்தார். அதே பகுதியில் வசிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை வித்யா 36, பன்றிக் காய்ச்சல் பாதிப்பால், தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பகுதியில் மேலும் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்த செய்தி 'தினமலரில்' வெளியானது. சுதாரித்து கொண்ட பேரூராட்சி நிர்வாகம் தீவிர துப்புரவு பணியை மேற்கொண்டது.தனி வார்டுபன்றிக்காய்ச்சல் உறுதி படுத்தப்பட்ட பின்னரும், மருத்துவமனையில் ஆசிரியை வித்யாவுக்கு பொது வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டார். அவரது கணவர், குழந்தைகள் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோம்பை வட்டார சுகாதார அலுவலர் வசந்தி பரிபூரணம் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர் காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X