சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : டிச 05, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 கொலை, தற்கொலை, பலி

ரயிலில் அடிபட்டு இருவர் பலி
ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஊழியர்கள், நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேல்பட்டி - வளத்துார் மற்றும் குடியாத்தம் - காவனுார் ரயில் நிலையங்கள் இடையே, ரயிலில் அடிபட்டு, இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரிந்தது. இறந்தோர் குறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் பஸ் பயணி மரணம்
காவேரிப்பட்டனம்: திருச்சி மாவட்டம், தேவகோட்டையில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு, 'ரெங்கநாதன் டிராவல்ஸ்' என்ற ஆம்னி பஸ், 22 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பட்டனம் அடுத்த போத்தாபுரம் அருகே சென்ற போது, துாக்க கலக்கத்தில் இருந்த பஸ் ஓட்டுனர், ஈரோடில் இருந்து குஜராத் நோக்கி சென்ற லாரியின் பின்புறம் மோதினார். இதில், பஸ்சில் பயணம் செய்த, திருச்சி குண்டூரைச் சேர்ந்த, நாகராஜ், 56, பலியானார். பஸ்சில் பயணம் செய்த, 22 பேர் படுகாயமடைந்தனர்.

கணவன், மனைவி தற்கொலை
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, எழுவனம்பட்டியைச் சேர்ந்தவர், இருளப்பன், 40; ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி செய்தார். இவரின் மனைவி பாண்டியம்மாள், 35. இவரது மகள், ஸ்ரீதேவி, 18, திருமணமாகி, அதே ஊரில் உள்ளார்.இருளப்பனுக்கும், பாண்டியம்மாளுக்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு தகராறு நடந்தது. சிறிது நேரத்தில், வீட்டில் அமைதி நிலவியதால், சந்தேகத்தில், அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, பூச்சி மருந்து குடித்து, பாண்டியம்மாளும்; துாக்கிட்டு, இருளப்பனும் தற்கொலை செய்தது தெரிந்தது.

சேலை வாங்கி வந்தவர் பலி
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த, பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர், மணிகண்டன், 28; புதுச்சேரியில், ஓட்டல் ஒன்றில், சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். தன் மனைவியுடன், புதுச்சேரியில் வசித்து வந்தார். அவரது மனைவிக்கு, 7ம் தேதி வளைகாப்பு நடக்க உள்ளது.இதற்காக, சொந்த ஊருக்கு சென்றவர், வளைகாப்புக்காக, மனைவிக்கு புதிய சேலை எடுத்துக் கொண்டு, நேற்று மதியம், இருசக்கர வாகனத்தில், புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார்.செஞ்சி - திண்டிவனம் சாலை, ராஜாம்புலியூர் கூட்ரோடு அருகே, சென்னையில் இருந்து செஞ்சி வந்த அரசு பஸ், மணிகண்டன் மீது மோதியது. இதில், அவர் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
07-டிச-201910:50:09 IST Report Abuse
Sampath Kumar சபாஷ் தமிழ் நாடு அச்சிடேண்டால் டெத் ரேட் கோயிங் ஹை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X