இந்தியா

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்; ஸ்டுடியோ உரிமையாளருக்கு வலை

Added : டிச 05, 2019
Advertisement
மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்; ஸ்டுடியோ உரிமையாளருக்கு வலை

புதுச்சேரி : பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான ஸ்டுடியோ உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் மதுரை,36; இவர், காந்தி வீதி, சின்னக்கடை பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது ஸ்டுடியோவில் புதுச்சேரியை சேர்ந்த 31 வயது பெண், கடந்த 2017 முதல் 2019 மார்ச் மாதம் வரை பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 1ம் தேதி, திருமணம் ஏற்பாடு செய்து நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், நேற்று முன்தினம் தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 100 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த அப்பெண், நேற்று காலை 4:00 மணியளவில் இறந்தார்.

சிகிச்சையின்போது, நீதிபதி சிவக்குமாரிடம் அப்பெண் அளித்த வாக்குமூலத்தில், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்தபோது, உரிமையாளர் மதுரை எனக்கு குளிர்பானம் மற்றும் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார். அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதால், போலீசில் புகார் கொடுத்தால், அவரது குடும்பம் பாதிக்கப்படும் என்பதால் புகார் அளிக்கவில்லை.ஸ்டுடியோவில் இருந்து கடந்த மார்ச் மாதம் நின்று விட்டேன். என் குடும்பத்தினர் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நான் வேறு ஒருவரை திருமணம் செய்து துரோகம் செய்ய விரும்பவில்லை. ஆனால், குடும்பத்தினர் கடந்த 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்தினர். அதனால், உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டேன் என கூறியுள்ளார். அதன்பேரில், அரியாங்குப்பம் போலீசார், தற்கொலைக்கு துாண்டுதல், பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஸ்டூடியோ உரிமையாளர் மதுரையை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X