நில அபகரிப்பு வழக்கு: தி.மு.க., - எம்.எல்.ஏ., திருப்பூரில் ஆஜர்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்கு: தி.மு.க., - எம்.எல்.ஏ., திருப்பூரில் ஆஜர்

Added : டிச 05, 2019
Share
திருப்பூர்: நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், திருப்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில், ஒரு பேப்பர் மில்லை வாங்க, ஒப்பந்தம் செய்தார்.கடந்த, '2011ல், இதை விற்ற, கிங்ஸ்லி உள்ளிட்டோருடன், ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை எழுந்தது. தீர்வு கோரி, சேப்பாக்கம், தி.மு.க., -

திருப்பூர்: நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், திருப்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில், ஒரு பேப்பர் மில்லை வாங்க, ஒப்பந்தம் செய்தார்.கடந்த, '2011ல், இதை விற்ற, கிங்ஸ்லி உள்ளிட்டோருடன், ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை எழுந்தது. தீர்வு கோரி, சேப்பாக்கம், தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகனிடம் இரு தரப்பினரும் சென்றனர். அப்போது, அன்பழகன் உள்ளிட்ட சிலர், தன்னை மிரட்டி, அந்த ஆலை மற்றும் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, சீனிவாசன், திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்கு, செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.விசாரணைக்காக, அன்பழகன், கிங்ஸ்லி, சக்சேனா ஆகியோர், திருப்பூர் மாவட்ட நீதிபதி அல்லி முன்னிலையில் நேற்று ஆஜராகினர். வழக்கு, 19ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X