பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு ஊர்வலம்

Added : டிச 05, 2019
Advertisement

தேனி, தேனி பழனிச்செட்டிபட்டியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் துவக்கி வைத்தார்.காசநோய் பிரிவு துணை இயக்குனர் முருகன், மாவட்டத் திட்ட மேலாளர் முகமதுபாரூக், மேற்பார்வையாளர் வைரவன், சைமன், ஆராக்கியம், நம்பிக்கை மையம், ஏ.ஆர்.டி.,மையம், சுகவாழ்வு மையம், ரத்தவங்கி ஆலோசகர்கள், ஆய்வு கூட பணியாளர்கள், மாவட்ட காசநோய் திட்ட பணியாளர்கள், தொடர்பணியாளர் திட்டம், இலக்கு மக்கள் திட்டம், சி.எஸ்., விகான் திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் அங்கிருந்து தேனி, அல்லிநகரம் வழியாக அன்னஞ்சி விலக்கு வரை சென்று முடிந்தது.சமூக பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல் என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஒலிபெருக்கி வாகனம் மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X