தமிழ்நாடு

சோத்துப்பாறை அணையில் தண்ணீர் மறுகால் பாய்வது... தொடர்கிறது

Added : டிச 05, 2019
Advertisement


பெரியகுளம், :சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்ட நிலையிலும் நேற்று 64 வது நாளாக மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை நீர்பிடிப்பு பகுதியில் மழையால் சோத்துப்பாறை அணைக்கு தண்ணீர் வருகிறது. மொத்த உயரம் 126 அடி. அக்.3ல் அணையின் நீர்மட்டம் முழுவதுமாக உயர்ந்தது, மறுகால் பாய்ந்தது. அக்.15 முதல் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.2020 மார்ச் 15 வரை மொத்தம் 151 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.பெரியகுளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், பாப்பிபட்டி கண்மாய், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் புரவு உட்பட பழைய ஆயக்கட்டு பகுதிகளான ஆயிரத்து 825 ஏக்கர் நிலங்களுக்கும், லட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான ஆயிரத்து 40 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது.இதில் பெரியகுளம் பகுதிக்கு குடிநீருக்கு வினாடிக்கு 3 கனஅடி நீர் அடங்கும். மழை தொடர்ந்து பெய்ததால் நேற்று 64 வது நாளாக சோத்துப்பாறை அணையில் இருந்து நீர் மறுகால் பாய்ந்தது. வினாடிக்கு 208 கனஅடி நீர் வரத்து அப்படியே மறுகால் சென்றது. மழையளவு 10 மி.மீ., மறுகால் பாய்வது தொடர்வதால் பாசன விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X