பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பஞ்சலிங்கம் அருவி செல்ல தடை நீடிப்பு

Added : டிச 05, 2019
Advertisement
 பருவ மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பஞ்சலிங்கம் அருவி செல்ல தடை நீடிப்பு

உடுமலை:வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக, மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம், 29ம் தேதி, அமராவதி அணை நீர்மட்டம், 63.55 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 349 கன அடியாகவும் இருந்தது.பருவ மழை தீவிரமடைந்து, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த ஆறு நாட்களில், ஏழு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 70.02 அடியாகவும், அணை நீர்இருப்பு, 2,396. 72 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு, 1,261 கன அடியாக இருந்தது.திருமூர்த்திமலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், காட்டாற்று வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு கடந்த, 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றும், நீர்வரத்து அதிகளவு காணப்பட்டதால், அருவிக்கு செல்ல யாரையும் அனுமதிக்க வில்லை. இதனால், திருமூர்த்திமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில், 47.11 அடியாகவும், நீர்இருப்பு, 1,409.97 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.

அணைக்கு, பாலாற்றின் மூலம், வினாடிக்கு, 124 கனஅடி நீரும், காண்டூர் கால்வாய் மூலம், 810 கனஅடி என, நீர்வரத்து வினாடிக்கு, 934 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து, பாசனத்திற்கு, வினாடிக்கு, 1,049 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X