பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் சிறப்பு கண்காட்சி

Added : டிச 05, 2019
Advertisement
 அரசு பள்ளியில் சிறப்பு கண்காட்சி

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். அரசுப்பள்ளிகளில், குழந்தைகளுக்கு கல்வியோடு, கல்வி இணைசெயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் பலரின் விருப்பமாக உள்ளது.

இந்த வரிசைகளில், சோமவாரப்பட்டி நடுநிலைப்பள்ளியும் தொடர்ந்து பெற்றோர் மட்டுமின்றி, மாணவர்களின் விருப்பப்பள்ளியாகவும் கனவுப்பள்ளியாகவும் மாறிவருகிறது.இப்பள்ளியில், குழந்தைகளின் கற்பனைத்திறனை கலையாக மாற்றுவதற்கு, தொடர்ந்து கண்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மக்கும் பொருட்களை வைத்து, மாணவர்கள், அவர்களால் முடிந்த படைப்புகளை காட்சிப்படுத்த வேண்டும்.

இதன்படி அப்பள்ளியில் சிறப்பு கண்காட்சி நடந்தது. இதில் மாணவர்கள் படைப்புகளை வைத்து அசத்தினர்.கண்காட்சி நடத்துவதால், மாணவர்களும், ஆர்வத்தோடு, பல படைப்புகளை வடிவமைக்கின்றனர். மேலும், இந்த செயல்பாட்டினால், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

தவிர, பள்ளியில் பல ஆண்டுகளாக, குழந்தைகள் பிளாஸ்டிக் கவர்களில் திணிக்கப்பட்டிருக்கும் சிற்றுண்டிகளை உண்பதற்கு, தடைவிதித்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் பசுமைப்படை, செஞ்சிலுவை சங்க மாணவர்கள், இதனை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். பள்ளியில், மாணவர்களுக்கு செயல்பயிற்சியின் மூலமாக வணிகமும் கற்றுத் தருகின்றனர்.

பள்ளியின் ஒரு அறையில், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் விற்கப்படும் அங்காடி ஒன்று செயல்படுகிறது. மாணவர்களாகவே இதனை நடத்துகின்றனர்.இடைவேளை நேரங்களில், நான்கு மாணவர்கள், அங்காடியின் பொறுப்பாளர்களாக சென்று கவனித்துக் கொள்கின்றனர். இவ்வாறு, பல வழிகளிலும், குழந்தைகளின் திறன்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது இப்பள்ளி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X