பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பில் கூடுதல் சர்க்கரை வேளாண்துறை அறிவுரை

Added : டிச 05, 2019
Advertisement

மடத்துக்குளம்:கரும்பு பயிரில் சர்க்கரை கட்டு கூடுதலாக கிடைக்க வழிமுறைகள் குறித்து வேளாண்மைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கணியூர், கொமரலிங்கம், நெய்க்காரபட்டி, பழநி மற்றும் ஆலைப்பகுதி ஆகிய ஐந்து கோட்டப்பகுதி விவசாயிகளிடம், ஒப்பந்த முறையில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆண்டு தோறும் ஏப்ரல் தொடங்கி, செப்டம்பர் வரை ஆறுமாதம் ஆலை அரவைப்பருவமாகும். 2020 ல் தொடங்கும் அரவைக்கு, ஆயக்கட்டுபகுதியில் கரும்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.ஆலைக்கு உற்பத்தியாகும் கரும்புபயிர்கள் பராமரிப்பு குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது: தற்போது, கரும்பு விவசாயிகள் அமராவதி ஆலைக்கு, ஒப்பந்த முறையில் கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.

ஆலைக்கு உற்பத்தியாகும் கரும்புக்கு பேரூட்டச்சத்து கிடைக்க, இரண்டரை ஏக்கருக்கு, 300:100:200 கிலோ என்ற அளவில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். இதில் மறுதாம்பு கரும்பு பயிருக்கு, இரண்டரை ஏக்கருக்கு, 300:25 சதவீதம் அதிக தழைச்சத்து, 100:200: கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும். இந்த முறையில் பராமரித்தால், சர்க்கரை கட்டு கூடுதலாக கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X