சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உச்சம் தொட்டது முருங்கை விலை; கிலோ ரூ.500க்கு விற்பனை

Added : டிச 05, 2019 | கருத்துகள் (3)
Advertisement
முருங்கை, விலை உயர்வு, பொள்ளாச்சி, கிலோ ரூ.500, சாகுபடி, மார்க்கெட், முருங்கை பூ

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டில், வரத்து வெகுவாக குறைந்ததால், முருங்கைக்காய் விலை கிலோ, 500 ரூபாயாக உயர்ந்தது.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் விளையும் காய்கறிகள், மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப் படுகிறது. உற்பத்தி குறையும் சீசன்களில், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஒசூர், மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

சமீப நாட்களாக, மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், 15 கிலோ எடையுள்ள கூடை தக்காளி, 280 முதல், 400 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. கத்தரிக்காய் கிலோ, 60 ரூபாய்க்கு விற்றது. சீசன் காலங்களில் வரத்து அதிகம் இருந்தும், முருங்கைக்காய் கிலோவுக்கு, 10 - 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி விவசாயிகள், இழப்பை கொடுக்கும் முருங்கை சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.

சமீப நாட்களாக, மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்தது. கிலோ, 50 - 100 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த ஒரு வாரத்தில், முருங்கைக்காய் விலை கிலோ, 500 ரூபாயாக உயர்ந்தது. இது வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. மொத்த காய்கறி வியாபாரி பாலு கூறுகையில், ''தொடர்ந்து பெய்யும் பருவமழையால், தக்காளி மட்டுமின்றி, பெரும்பாலான காய்கறி வரத்து குறைந்துள்ளது. விளைச்சல் நிலத்தில் மழை நீர் தேங்கியதால், செடிகள் அழுகி விட்டன.

தற்போது, முருங்கைக்காயின் விலையும் யாரும் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம், மூலனுார் பகுதியில் பெய்த தொடர் மழையால், மரங்களில் பூத்திருந்த ஒட்டு மொத்த முருங்கை பூக்களும் உதிர்ந்து விட்டதால், மரங்களில் காய்ப்பிடிப்பு குறைந்துவிட்டது. பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால், பொள்ளாச்சி ஆர்டரின் பெயரில், ஒட்டன்சந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ முருங்கைக்காய், 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இது, பொள்ளாச்சி மார்க்கெட் வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை வியாபாரிகள் கிலோ, 600 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201912:29:03 IST Report Abuse
ஸாயிப்ரியா விவசாயிகள் மகிழட்டும். பொள்ளாச்சிக்கு முருங்கைக்காய் தற்சமயம் தேவையா. இருந்தாலும் பாக்யராஜ் சார் வேறு விளக்கம் தந்தது நினைவுக்கு வந்து அங்கே இருந்த சிலர்உள்ளே? இருந்தாலும் எதுக்கு ரிஸ்க். ஊர் பேரை அப்படி மாற்றி விட்டான்களே.
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201909:58:49 IST Report Abuse
ருத்ரா ஒருபுறம் விசாயிகள் மகழ்ந்தாலும் பொள்ளாச்சிக்கு முருங்கக்காய் அதிகம் தேவையா. சில காய்கறிகள் சில நடிகர்கள் நினைவிற்கு வருதை தவிர்க்க இயலவில்லை.
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201906:36:29 IST Report Abuse
kulandhai Kannan விவசாயிகள் மகிழ்ச்சி என்று ஏன் செய்தி போடுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X