இந்தியா

வக்பு வாரியம் செயலிழந்துள்ளது அன்பழகன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

Added : டிச 05, 2019
Share
Advertisement
புதுச்சேரி : சிறுபான்மை மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார். அரசு சார்பில் வக்ப் வாரியத்தில் நடந்த சிறுபான்மையினர் தின விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது: சிறுபான்மையினருக்கு விழா எடுப்பது மட்டுமன்றி, அவர்களின் நலனில் அக்கறை எடுத்து பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால், இந்த ஆட்சியில் கடந்த

புதுச்சேரி : சிறுபான்மை மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.

அரசு சார்பில் வக்ப் வாரியத்தில் நடந்த சிறுபான்மையினர் தின விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது: சிறுபான்மையினருக்கு விழா எடுப்பது மட்டுமன்றி, அவர்களின் நலனில் அக்கறை எடுத்து பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால், இந்த ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டத்தையும் அம்மக்களின் நலனிற்காக செயல்படுத்தவில்லை

.சிறுபான்மை இன மக்கள் கணக்கெடுப்பு நடத்தவில்லை. அந்த மக்களுடைய நலனுக்காக பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. வக்பு வாரிய தலைவர் நியமிக்காததால் வக்பு வாரியம் செயலிழந்துள்ளது. சிறுபான்மையினருக்கான அரசின் உதவிகள் அந்த மக்களை சென்றடையவில்லை. ஆதலால் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் இருந்து பிரித்து, சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் தனியாக துவங்க வேண்டும்.தகுதியான சிறுபான்மையினருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். முஸ்லிம் சொத்துக்கள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதொழில் கடன் வழங்க வேண்டும். கொம்யூன் அளவில் காஜியார் நியமிக்க வேண்டும் என பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X