இந்தியா

இன்ஸ்பையர் விருது போட்டி ஆதித்யா மாணவர்கள் சாதனை

Added : டிச 05, 2019
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர்கள் இன்ஸ்பையர் மண்டல போட்டிக்கும், அறிவியல் கண்காட்சியில் தேசிய அளவில் பங்கேற்க தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, டி.எஸ்.டி., அமைப்பு, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவை ஊக்குவிக்க, இன்ஸ்பையர் விருது திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அறிவியலை படித்தல், ஆராய்ச்சி வாழ்க்கையை தொடருதல், படைப்பு சிந்தனையை வளர்த்தல் ஆகிய குறிக்கோளுடன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.புதுச்சேரி ஆதித்யா பள்ளியை சேர்ந்த 5 மாணவ மாணவியர் இன்ஸ்பையர் விருது திட்டத்தில் பங்கேற்றனர். இதில் பத்தாம் வகுப்பு மாணவி அதிர்ஷ்டமங்கை, 8ம் வகுப்பு மாணவர் பிரியதர்ஷன், 6ம் வகுப்பு மாணவர் சஷ்ரீக் ஆகியோர் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளனர்.மேலும், மத்திய கல்வி வாரியம் சென்னையில் நடத்திய பிராந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில், ஆதித்யா பள்ளி 7ம் வகுப்பு மாணவர் அனீஸ் பாரதி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகி சாதனை படைத்தனர்.சாதனை மாணவர்களை, ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்து மற்றும் வித்யநாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர் நடேசன் காங்கேயன், இயக்குனர்கள் பொறுப்பாசியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X