இந்தியா

அரசு அலுவலக பாதுகாப்பு பணி மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு

Added : டிச 05, 2019
Advertisement

புதுச்சேரி : துாய்மை பணியை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பாதுகாவல் பணியையும் உழவர்கரை நகராட்சி மகளிர் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைத்து அசத்தியுள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் உழவர்கரை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஜவகர் நகர், மேரி உழவர்கரை, வி.வி.பி., நகர் ஆகிய இடங்களில் உள்ள உழவர்கரை நகராட்சி அலுவலகங்களை துாய்மைப்படுத்தும் பணி மூன்று சுய உதவிக் குழுக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் மூன்று அலுவலகங்களுக்கும் பாதுகாவல் பணி வசந்தம் தாமரை பகுதி நிலை கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை உள்ளாட்சித் துறை இயக்குனரும் புதுச்சேரி மாநில நகர்புற வாழ்வாதார இயக்குனருமான மலர்கண்ணன் வழங்கினார்.நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, கூட்டமைப்பு தலைவி கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X